Wednesday, February 22, 2017

அடக்கம் செய்வதற்காக மையானத்திற்கு எடுத்து செல்லும் வழியில் உயிர் பிழைத்த வாலிபர்


கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தின் மானாங்குடி பகுதியை சேர்ந்த நிங்கப்பா  மஞ்சுளா தம்பதிகளின் மகன்  குமார் மார்வாத் (17). இவரை கடந்த மாதம் நாய் ஒன்று கடித்துள்ளது, நாய் கடிக்கு மார்வாத் எந்த வித சிகிச்சையும் எடுத்து கொள்ளாததால் அண்மையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.


இதனால் பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் குமாரின் உடல்நிலை மிகவும் அபாயகட்டத்தை எட்டியதால், மருத்துவர்கள் அவரை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் பெற்றோரிடம் குமார் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறி கைவிரித்துள்ளனர்.

இதனால் பெற்றோர் குமாரை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று கவனித்துள்ளனர்.

தொடர்ந்து கவனித்து வந்த போது குமாரின் உடல் அசைவுகள் திடீரென நின்று போனதால், குமார் இறந்துவிட்டதாக கருதி, பெற்றோர் அவரை அடக்கம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து குமாரை அடக்கம் செய்வதற்காக மையானத்திற்கு எடுத்து செல்லும் போது திடீரென குமாரின் உடலில் அசைவுகள் ஏற்பட்டுள்ளது.  மேலும் அவர் தனது கை மற்றும் கால்களை அசைத்து கொண்டு வேகமாக மூச்சு விட்டுக்கொண்டே விழித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆச்சரியமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக குமாரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  மறுபடியும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment